Pages

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி


இன்று சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை, அனைவருமே மிக பிரபல்யமான சமூக வலைத்தளமான Facebook-ல் இணைந்து உள்ளார்கள். Facebook சமூக வலைதலமானது தனது அபார வளர்ச்சியின் காரணமாக சிறுவர் முதல் பெரியோர் என்று அனைவரையும் கவர்திளுத்துள்ளது.

இதில் இணைத்துள்ள பலர் தமது தனிப்பட்ட விடயங்களை நம்பிக்கைகுரியவர்களுடன் பகிர்த்து கொள்வது, தமது புகைப்படத்தை மற்ற நண்பர்களும் பகிர்த்து கொள்வது என்று பல வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது Facebook நிறுவனம். Facebook பிரபல்யமடைந்த அதே சமயம் அதன் மீதான எதிர் தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.



Facebook Accounts ஹேக் செய்யப்படுவதும், தனி நபர் விடயங்கள் வெளியிடப்படுவதும் நாம் தினம் தோறும் இணையத்தில் பார்க்கும் சாதாரண விடயமாகிவிட்டது. அதனால் இன்றைய பதிவில் உங்கள் Facebook கணக்கை யாரவது பாவித்து இருக்கிறார்களா என்று எப்படி தெரிந்து கொள்வது என்றும், உங்கள் Facebook கணக்கை எப்படி பாதுகாத்து கொள்வது என்றும் கூறுகிறேன்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி?

  • உங்கள் Facebook account-ல் Settings எனும் option-ஐ click செய்யவும்.
  • அங்கே Security எனும் option-ஐ click செய்யவும்
  • அதிலே Where You're Logged In எனும் option-ல், உங்கள் Facebook கணக்கு இறுதியாக எங்கிருந்தெல்லாம் Login செய்யபட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  • IP Address-ஐ பரிசீலனை செய்வதம் மூலம் உங்கள் Facebook கணக்கு எந்த இடத்தில் இருந்து Login செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
  • சந்தேகத்திட்கிடமான Logins ஏதும் காணப்பட்டால் உடனடியாக End Activity எனும் option-ஐ தெரிவு செய்துவிட்டு பின்னர் உங்கள் Facebook கணக்கின் Password-ஐ மாற்றி கொள்வது சிறந்தது.


 Facebook கணக்கை பாதுகாப்பாக வைத்து கொள்ள சில வழிமுறைகள்


Facebook நிறுவனமானது உங்கள் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக பல பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகபடுத்தி உள்ளது.

தேவை ஏற்படும் பட்சத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ, உங்கள் Facebook கணக்கு Login செய்யப்பட்டவுடன் செய்தியை தெரிவிக்கும் வசதியை Facebook நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது.

அத்தோடு நீங்கள் உங்களது தொலைபேசி இலக்கத்தை Facebook கணக்கோடு இணைத்து இருக்கும் படசத்தில், புதிய Device-களில் இருந்துஉங்கள் Facebook கணக்கிற்கு Login செய்யும் போது Security Code ஒன்றின் மூலம் Verify செய்து கொள்ளும் வசதியையும் Facebook நிறுவனம் அளித்துள்ளது.



இந்த வசதிகளை உங்கள் Facebook கணக்கில் செயற்படுத்தி கொள்ள Settings-ற்கு சென்று அங்கே Security எனும் option-ஐ தெரிவு செய்து, அதிலே Login Alert மற்றும் Login Approval என்று இருக்கும் option-களை தெரிவு செய்து மாற்றியமைத்து கொள்ளலாம்.

Rifthy Moulana

Phasellus facilisis convallis metus, ut imperdiet augue auctor nec. Duis at velit id augue lobortis porta. Sed varius, enim accumsan aliquam tincidunt, tortor urna vulputate quam, eget finibus urna est in augue.

Related Posts:

No comments:

Post a Comment