பார்த்தவுடன் தானாகவே அழியக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை வைபரில் அனுப்பலாம்..!
நீங்கள் உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் பகிரும் புகைப்படங்களை அவர்கள் பார்த்தவுடன் தானாகவே நீக்கப்படுவதை விரும்புகிறீர்களா?
நீங்கள் வைபர் சேவையை பயன்படுத்துபவர் எனின் உங்களாலும் இந்த வசதியை அனுபவிக்க முடியும்.
வாட்ஸ்அப் போன்றே வைபர் சேவையும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சேவையாகும். வைபர் செயலியின் அண்மைய மேம்படுத்தலில் நீங்கள் அனுப்பிய தகவல் ஒன்றை பெற்றுக் கொண்டவரின் மொபைல் சாதனத்தில் இருந்து நீக்கிக் கொள்வதற்கான வசதியை வைபர் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.
வைபரில் பார்த்தவுடன் அழிக்கும் வசதி
இதனை தொடர்ந்து "நீங்கள் அனுப்பிய புகைப்படத்தை அல்லது வீடியோவை பெற்றுக்கொண்டவர் பார்த்ததன் பின் அது தானாகவே அழியும் படி ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வைபர் நிறுவனம்.
இவ்வாறு பெறுபவர் குறிப்பிட்ட புகைப்படத்தை அல்லது வீடியோவை பார்த்ததன் பின் தானாக அழியும் படி அமைத்துக்கொள்ள வைபர் தரும் விங்க் (Wink) எனும் செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
இந்த செயலியின் மூலம் புகைப்படங்களை பிடித்து அதில் நீங்கள் விரும்பும் வாசகங்களை எழுதவும் முடியும். பின் குறிப்பிட்ட செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டிருக்கும் Send என்பதை அழுத்தும் போது உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டுள்ள வைபர் செயலி திறக்கும் இனி அதன் மூலம் குறிப்பிட்ட புகைப்படத்தை நீங்கள் விரும்பும் நபருக்கு அனுப்ப முடியும்.
மேலும் நீங்கள் புகைப்படங்களை அல்லது வீடியோ கோப்புக்களை அனுப்பும் போது அது பார்க்கப்பட்டு எவ்வளவு நேரத்தின் பின் அழிக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவு செய்வதற்கான வசதி இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.
குறிப்பு:
இதற்கு வைபர் செயலியின் அண்மைய பதிப்பு மற்றும் விங்க் (Wink) ஆகிய செயலிகள் உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment