2015 ஆம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு கருவிகள் வெளியாகின . விலை உயர்ந்த கருவிகளில் துவங்கி பட்ஜெட் ரகம் வரை phone எக்கச்சக்க கருவிகளை இந்திய ஸ்மாராட்போன் சந்தை கடந்து வந்திருக்கின்றது. பல கருவிகள் வெளியானாலும் அவை அனைத்தும் சந்தையில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.
நிலைமை இப்படி இருக்க இந்த ஆண்டு முழுவதும் வெளியானவைகளில் தலைசிறந்த 15 கருவிகளின் பட்டியல்

சோனி எக்ஸ்பீரியா இசட்5
தலைசிறந்த கேமரா கொண்ட இந்த சோனி கருவி இந்தாண்டின் தலைசிறந்த கருவிகளில் தனக்கான இடத்தை பிடித்திருக்கின்றது. R

யு யுடோப்பியா
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டான யு, இந்தாண்டு தனது யுடோப்பியா கருவி மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

லெனோவோ கே3 நோட்
பட்ஜெட் விலையில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க நினைப்போருக்கு மிகவும் சரியான கருவியாக லெனோவோ கே3 நோட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் ஹானர் 7
சக்திவாய்ந்த செயல்பாடு, சிறந்த கேமரா, மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் இந்த கருவியின் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்கவை.

மோட்டோ ஜி டர்போ எடிஷன்
ரூ.15,000 பட்ஜெட் விலையில் தலைசிறந்த கருவியாக மோட்டோ ஜி டர்போ எடிஷன் இருக்கின்றது எனலாம். தலைசிறந்த பிராசஸர் மற்றும் சீரான வேகம் இந்த கருவியை தலைசிறந்த ஒன்றாக மாற்றுகின்றது என்றும் கூறகலாம்.

ஏசஸ் சென்ஃபோன் செல்பீ
சிறப்பான செல்பீ எடுக்கவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சென்போன் செல்பீ மற்ற சிறப்பம்சங்களையும் சிறப்பாக கொண்டிருப்பது இதன் விற்பனையை அதிகரித்ததோடு இந்தாண்டின் பட்டியலில் 10 இடத்தையும் பெற்றுள்ளது.

மைக்ரோசாபாட் லூமியா 950 எக்ஸ்எல்
பெரிய திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சிறிய கணினியாகவும் இருக்கின்றது எனலாம். வியாபிரகளுக்கு ஏற்ற கருவியாக இருக்கும் இந்த கருவி இந்தாண்டின் தலைசிறந்த கருவிகளில் 09 இடத்தில் இருக்கின்றது.

எல்ஜி ஜி4
தென்கொரிய நாட்டை சேர்ந்த எல்ஜி நிறுவனத்தின் ஜி4 கருவியானது சீரான இயக்கம், தலைசிறந்த கேமரா மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்களை கொண்டு இந்தாண்டின் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

ஒன்ப்ளஸ் 2
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் இந்த மாடல் சிறப்பான யூஸர் இன்டர்ஃபேஸ், கைரேகை ஸ்கேனர் மற்றும் தலைசிறந்த கேமரா போன்றவைகளை கொண்டு இந்த ஆண்டின் அதிகம் விற்பனையான கருவியாவகளில் ஒன்றாக இருப்பதோடு தலைசிறந்த கருவிகளில் 07வது இடத்திலும் இருக்கின்றது.

லெனோவோ வைப் எஸ்1
ரூ.20,000 பட்ஜெட்டில் வாங்க தலைசிறந்த கருவிகளில் வைப் எஸ்1 சிறப்பான கருவியாக இருக்கின்றது. 5 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர் கொண்டிருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்
இரு பக்கம் வளைந்த திரை கொண்டிருக்கும் இந்த கருவி அதிகம் விற்பனையானதோடு 2015 ஆம் ஆண்டின் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களில் 05 இடம் பிடித்திருக்கின்றது.

கூகுள் நெக்சஸ் 5எக்ஸ்
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த கருவி அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்திருக்கின்றது என்பதன் வெளிப்பாடாக இதன் விற்பனையை கூறலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட்5
இந்த ஆண்டில் வெளியானவைகளில் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி நோட்5 மூன்றாவது இடம் பிடித்திருக்கின்றது.

ஐபோன் 6எஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் முந்தைய கருவியை விட அதகம் மேம்படுத்தப்பட்டிருந்ததோடு இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இந்த கருவி 2 ஆம் இடத்தை பிடித்திருக்கின்றது.

கூகுள் நெக்சஸ் 6பி
2015 ஆம் ஆண்டில் தலைசிறந்த ஸ்மார்ட்போனாக கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கருவி இருக்கின்றது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கருவியாக இருந்து தலைசிறந்த ஸ்மார்ட்போனாக கூகுள் நெக்சஸ் 6பி இடம் பிடித்திருக்கின்றது.
No comments:
Post a Comment