வேகமாக இயங்கும் இன்றைய உலகில் அனைவரும் கிடைக்கக்கூடிய சொற்ப நேரத்தையும் கூட பயனுள்ளதாக பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் எமது ஸ்மார்ட் போன்களை பல மணித்தியாலங்களாக மின்னேற்றிய காலம் நீங்கி ஒரு சில நிமிடங்களில் ஸ்மார்ட் போன்களை மின்னேற்றிக் கொள்வதற்கான காலம் இன்று உருவாகியுள்ளது.
இதனடிப்படையில் அண்மையில் Huawai நிறுவனமும் கூட 5 நிமிடங்களில் ஸ்மார்ட் போனின் பேட்டரியை 50 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்வதற்கான சோதனையை வெற்றிகரமாக நடாத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து சிங்கப்பூரில் இருக்கும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர் "ரஷித் யாசமி" என்பவரால் புதியதொரு தொழில்நுட்பமும் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பேட்டரியை வேகமாக மின்னேற்றும் ஸ்மார்ட் சிப்" Smart Chip
இவர் தயாரித்திருக்கும் "ஸ்மார்ட் சிப்" Smart Chip ஐ பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் பேட்டரியை 10 நிமிடங்களில் முழுமையாக மின்னேற்றிக் கொள்ள முடியும்.
இது எமது விரல் நகத்தின் அளவையே கொண்டுள்ளதுடன் இதனை பயன்படுத்தி ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளை மாத்திரம் அல்லாது மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களில் இருக்கக்கூடிய பேட்டரிகளையும் மின்னேற்றிக் கொள்ள முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது பேட்டரிகளை வேகமாக மின்னேற்றிக் கொள்ள உதவுவது மாத்திரம் இன்றி அவைகள் திடீர் என்று வெடிப்பதில் இருந்தும் தீப்பற்றுவதில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றது.
மேலும் இந்த தொழில்நுட்பத்தை இலத்திரனியல் கார்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவதற்காக கார்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்துடனும் மற்றும் சோனி,சாம்சங் ஆகிய நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இதனை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப வருகைகளை அடுத்த வருடம் எதிர்பார்க்கலாம்
No comments:
Post a Comment